மட்டு. ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலைக்கு நீதி கோரி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
23

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 16 வது ஆண்டு நினைவு தினத்தையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று  (08) ஊடகவியலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசிங்கவின் 16 வது நினைவேந்தலையிட்டு   மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஆவலர்கள் ஒன்நிணைந்து அன்னாரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடக அடுக்குமுறை நிறுத்த வேண்டும், ஊடகவியலார்களின் சுதந்திரமாக நடமாட முடியாத நாடு இலங்கை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற சர்வதேச விசாரணை வேண்டும்.  ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here