கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயங்களுக்குள்ளான 13பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்றுவருவதோடு சம்பவம் தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.சதீஸ்