தைபொங்கள் விழாவை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் 15ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11பேர் கொண்ட ஜந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி 17.18.01.2025.ஆகிய திகதிகளில் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் போது எட்டு அணிகள் பங்கு பற்றியதோடு இறுதி போட்டிக்கு ரெட்பெக் இகல் மற்றும் குயின்ஸ் லேண்ட் புளு ஆகிய அணிகள் இருதி போட்டிக்கு பங்கு பற்றியதில் ரெட்பெக் இகல் அணி முதலில் துடுபாட்டத்தை மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட ஜந்து ஓவர்களில் 03விக்கட்டுகளை இழந்து 53 ஓட்டங்களை பெற்றனர்.
54 எனும் இலக்கை நிர்ணயித்து பதிலுக்கு துடுபெடுத்தாடிய குயின்ஸ் லேண்ட் புளு அணியினர் நான்கு விக்கட்டுகளை இழந்து 35ஓட்டங்களை பெற்று தோல்விய டைந்தது இதில் முதலாம் மற்றும் இரண்டாவது இடங்களை பெற்ற அணிகளுக்கு கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான சுகததாச கலந்து கொண்ட நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதோடு நினைவு பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
எஸ். சதீஸ்