பன்விலவில் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது.
நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாறைகளில் மோதியே ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அருகிலிருந்தவர்களின் உதவியுடன் இருவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண், அதே நேரத்தில் காணாமல் போன மூன்றாவது பயணியைக் கண்டுபிடிப்ப தற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில, விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.