வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் : 14 பேர் வைத்தியசாலையில்

0
158

கொழும்பு நோக்கி காத்தான் குடியிலிருந்து பயணித்த பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் இன்று (20) காலை விபத்துக்குள்ளானது.

குறித்த பஸ்ஸில் 49 பேர் பயணித்த நிலையில் விபத்தின்போது பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் சாரதி உட்பட 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here