பொலிஸாருடன் தர்க்கம் – அர்ச்சுனா எம்.பி மீது தீவிர விசாரணை

0
104

அநுராதபுரம் பகுதியில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைக்கு நேற்றையதினம் (20) இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா எம்.பி.  மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

போக்குவரத்து சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் இன்றையதினம் (21) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துகள் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலானதா எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனதுங்க குறிப்பிட்டார்.

போக்குவரத்து சட்டம், தண்டனைக் கோவைச் சட்டங்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here