வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த முஹம்மது புஹாரி 512வது படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராக பொறுப்பேற்றார்
இலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராகப் பணியாற்றிய முஹம்மது புஹாரி கடந்த 18.01.2025ம் திகதி Regimental Sargent Major ஆகப்பதவியுயர்வு பெற்று யாழ் 512வது படைப்பிரிவில் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
லெபனானில் சர்வதேச அமைதி காக்கும் படையில் இலங்கை படையனி சார்பாக இணைந்து செயலாற்றிய இவர், வெளிநாடுகளில் விசேட இராணுவ பயிற்சியும் பெற்று 13 பதக்கங்கள் பெற்று, பிரதேசத்துக்கு பெருமை தேடிக்கொடுத்த இராணுவ வீரராவார்.
கடந்த கொவிட் காலத்தில் கொரோனா ஜனாசாக்களை மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யும் பணிகளில் இராணுவத்தின் சார்பாக மிகச்சிறப்பாகச் செயலாற்றியவர்.