பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

0
85

இவ்வருடத்திற்கான வெளிகேப்பொல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெளிகேப்பொல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இக்குழு கூட்டமானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரும் குழுவின் தலைவருமாகிய சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இக்குழுக் கூட்டத்திற்கு இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பத்மகுமார, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ச, வெளிகேப்பொல பிரதேச செயலாளர் உட்பட அரச நிறுவனங்களின் தலைவர்களும் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் இதுவரை நிறைவுசெய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அவற்றிலுள்ள குறை நிறைகள் என்பன தொடர்பாகவும் சமகால பிரச்சினைகளும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here