கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்77வது சுதந்திர தின நிகழ்வும், விஷேட துஆ பிரார்த்தனையும்

0
14
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின விஷேட நிகழ்வு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்   (04)  இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் ஆரம்பமாக கல்முனை பிரதேச செயலாளர் டி. எம். எம்.அன்ஸார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களின் அமைதிக்கும், சகவாழ்வுக்கும், பரஸ்பரத்திற்கும் மற்றும் தேசிய மறுமலர்ச்சிற்குமாக விஷேட துஆ பிரார்த்தனை நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் மெளலவி ஏ.ஆர். சபா முஹம்மட் நஜாஹி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் முஹம்மத் ராசித் அவர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மட் தமீம், கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மட் ஜெளபர், கல்முனை சமூர்த்தி தலைமைப்பீட சிரேஸ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் முஹம்மட் யாசின் பாவா, அக்கரைப்பற்று பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகர் முஹம்மட் ஆகிர், கல்முனை பிரதேச செயலக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் முக்தார் ஹுசைன் மற்றும் உலமாக்கள்,பொதுமக்கள், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here