டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சர் நளின் ஜெயதிஸ்ஸ அவர்களுக்குமான கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
கிளங்கன் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள், வளபற்றாக்குறைகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம், சுகாதார அமைச்சர் நளின் ஜெயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், கிளங்கன் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
டிக்கோயா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், வளப்பற்றாக்குறையினை முக்கியத்துவத்தின் அடிப்படையில் கட்டம் கட்டமாக நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.