குருநாகல் தோராயய பிரதேசத்தில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10) காலை கந்துருவெலயிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகள் பேருந்து ஒன்று தோராயப் பகுதியிலும், மதுருஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.