ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணமாகின்றார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று இவ்வாறு பயணமாகியுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார்.
150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000 ற்கும் அதிகமானவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளதுடன், அதனூடாக இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந் விஜயத்தில் இணைந்து கொண்டார்.