கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய தாய்மொழித்தினம்

0
51

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் 2025.02.21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது

“தாய்மொழியும் அறிவுக்கையளிப்பும்’’ கோட்பாடு, நடைமுறை என்னும் தலைப்பில் உரைவழி அறிவெழுகை நடைபெற்றது. திரு.த.இராஜரட்னம் அவர்களின் ஆற்றுப்படுத்தலில், “கோட்பாடு’’ என்பதனை முன்னிலைப்படுத்தி : வானதி காண்டீபன், ஞானசக்தி ருக்ஷ்சிவா, “நடைமுறை’’ என்பதனை முன்னிலைப்படுத்தி : பாலரஞ்சனி காண்டீபன், கீதா கணேஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

“பரதகலா வித்தகர்” ஸ்ரீமதி ஷாலினி வாகீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் “சின்மய கலாக்ஷேத்ரா” மாணவிகளின் ஆடல் நிகழ்வு இடம் பெற்றது. கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழுச் செயலாளர்  .த.இராஜரட்னம் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது

கலாநிதி ஜெ.தற்பரன்- பொதுச்செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here