சிவனொளிபாத மலையில் தீ – 30 ஏக்கர் காடு நாசம்!

0
60

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தியானது அதிக வெப்பகால நிலையினால் வேகமாக தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் சிவனொளிபாத மலை தொடர் வரை தீ பரவல் ஏற்பட்டது.

தீயை கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், நல்லத்தண்ணி பொலிஸார் மற்றும் நல்லத்தண்ணி வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் கடும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந் நிலையில் (24)அன்று நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் சமீர கம்லத் தலையீட்டினூடாக விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 ரக விமானத்தின் உதவியுடன் மவுசாகலை நீர்தேக்கத்தில் நீரை பெற்று 11 தடவைகள் தீப்பரவல் பகுதிக்கு வானிலிருந்து பாய்ச்சிய நிலையில் காட்டுத் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரி வீ.ஜே. ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

மேலும், மலையகத்தில் தொடர்ந்து கடும் வெப்ப காலநிலை காணப்படுவதனால் இனம் தெரியாதோரால் தீ வைக்கும் விசம செயல் இடம்பெற்று வருவாதாகவும் அவ்வாறு தீ வைப்போர் தொடர்பில் தமது காரியாலயம் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத் தருமாறும் வீ.ஜே. ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here