டீசல் மோசடியில் ஈடுபட்ட சாரதி , உதவியாளருக்கு விளக்கமறியல்

0
24

அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்ற எரிபொருளை வழங்கியதாக தெரிவித்து 9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை வழங்காது மோசடி செய்து விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதி அதன் உதவியார் இருவரையும் எதிர்வரும் 3 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

இது பற்றி தெரியவருவதாவது,

மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் பவுஸரில் சாரதியாகவும் அதன் உதவியாளராக கடமையாற்றிவரும் இருவரும் சம்பவதினமான வியாழக்கிழமை அம்பாறை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை பவுஸரில் எடுத்து சென்று அங்கு; பெற்றோலை அங்குள்ள நிலத்திலுள்ள ராங்கியில் நிரப்பிவிட்டு டீசல் ராங்கியில் சிறியளவு டீசலை வழங்கிவிட்டு முழு டீசலும் பவுஸரில் இருந்து பறித்துவிட்டதாக தெரிவித்து 3300 லீற்றர் டீசலை மோசடி செய்துகொண்டு அதனை அங்கிருந்து பவுஸரில் கொண்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டள்ள சிசிரி கமராவில் டீசலை அங்கு பறிக்காது கொண்டு செல்வதை கண்டு உடனடியாக மட்டப்பளப்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் குறித்த பவுஸர் எங்கிருக்கின்றது என ஜி.பி.எஸ் மூலம் சோதனையிட்டபோது கல்லடிபகுதியில் பவுஸர் இருப்பதை கண்டிறிந்தனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சட்டவிரோதமாக டீசலை விற்பனை செய்வதற்காக பவுஸரில் இருந்து டீசலை எடுத்து கலன்களில் நிரப்பிக் கொண்ட நிலையில் பவுஸர் சாரதி மற்றும் அவருக்கு உதவியார் இருவரையும் பொலிசார் கைது செய்ததுடன் டீசலுடன் கலன்களை மீட்டனர்

கனகராசா சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here