மார்ச் 7 ஆம் திகதி முதல் ரயில் நேர அட்டவணைகளில் திருத்தம்

0
133

மட்டக்களப்பு பாதையில் பளுகஸ்வெவ முதல் ஹிங்குராக்கொட வரையிலும், வெலிகந்த முதல் புனானி வரையிலும், திருகோணமலை பாதையில் கல்ஓயா சந்தி முதல் கந்தளாய் வரையிலும் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் ரயில் நேர அட்டவணைகள் திருத்தப்பட்டு, மார்ச் 7 ஆம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரவு நேர ரயில் சேவை ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுக்க விசேட ரயில் நேர அட்டவணையை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், குறித்த திகதியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் “மீனகயா” இன்டர்சிட்டி இரவுநேர தபால் ரயிலுக்கு S-13 வகை பவர் செட்டைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், 7ஆம் திகதி முதல் முன்பதிவு செய்த பயணிகள் சம்பந்தப்பட்ட ரயில்களுக்கு சரியான நேரத்தில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி ரயில் புறப்படும் நேரங்கள் திருத்தப்பட்டதாலும், வேக வரம்புகள் விதிக்கப்பட்டதாலும் பயணிகள் ரயில் நிலையங்களுக்கு நேரத்திற்கு வருகை தரவேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here