அட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான KM பிரிவில் உள்ள தோட்ட வீடுகளில் இன்று (03) இரவு தீ பரவியுள்ளது
இந்த தீயினால் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், பரவிவரும் தீயைக் கட்டுப்படுத்த தோட்டத் தொழிலாளர்களும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது