குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) காலை முன்னிலையான நாமல் ராஜபக்சவின் உறவினரான டெய்சி பொரஸ்ட் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதிச்சலவை தொடர்பில் அவர் வாக்குமூலமளிக்க இன்று சி.ஐ.டி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.