ஹெட்லி தோட்டத்தின் வனப்பகுதியில் தீ

0
12

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்லி தோட்டத்தின் வனப்பகுதி 09.03.2025 மாலை முதல் தீப்பற்றி எரிகின்றது. இந்த வனப்பகுதியின் தொடர்ச்சி ஹட்டன் நகர் வரை காணப்படுகின்றது.

இந்த வனப்பகுதியில் இருந்தே பல ஹெட்லி மற்றும் சலங்கத்தை பகுதியில் அமைந்துள்ள பல பெருந்தோட்டங்கள் மற்றும் டிக்கோயா, ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள ஆயிரகணக்கான குடும்பங்களுக்கு குடி நீர் பெறப்படுகின்றமை குறிப்படத்தக்கது.

மிக அடர்ந்த காடு வரண்ட காலநிலை காரணமாக மிக வேகமாக தீ பரவி வருகின்றது மேலும் இந்த இரவு நேரத்தில் இந்த வனப்பகுதிக்குள் சென்று தீயை கட்டுப்படுத்துவது மிக சிரமமான விடயம் என ஹெட்லி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பாம்பு, சிறுத்தை, பன்றி என பல உயிரினங்கள் அதிகளவில் இந்த வனப்பகுதயில் காணப்படுவதனால் இந்த தீயினை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here