கொழும்பு ஜனாதிபதி மாளிகை தாக்குதல் மற்றும் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்வத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் ஐந்து சந்தேக நபர்களை நுவரெலியா பொனவிஸ்டா மற்றும் கலுகெல கிராமங்களில் கைது செய்துள்ளதா நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், நேற்று முன் சனிக்கிழமை ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நபரை கைது செய்வதற்காக நுவரெலியா நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் சம்பந்தபட்ட நபரை நேற்று இரவு அவர் தங்கியிருந்த நுவரெலியா பொனிஸ்டா கிராமத்திற்கு சென்ற போது அவர் தங்கியிருந்த வீட்டில் அவருடன் மேலும் மூவர் தங்கியிருந்தனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற் கொண்ட போது அவர்களும் கொழும்பு ஜனாதிபதியின் இல்லம் தாக்குதல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்தது.
அத்தோடு இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் நுவரெலியா கலுகெல கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக தெரிய வந்தது. அங்கு சென்று அவரையும் கைது செய்தோம்.
இந்த ஐந்து சந்தேக நபர்களும் பிங்கீரியா, கொத்தட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த அதிகாரி இவர்களை நுவரெலியா நீதி மன்றத்தில் ஆஜாரப்;படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
ரமணன்