தலவாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து 22 வயது மதிக்கத்தக்க யுவதியின் சலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளன.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போய் உள்ளதாக உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இச்சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுக்கின்றனர்.
எஸ்.சதீஸ்