முன்னாள் முதலமைச்சருக்கு 6 வருட கடூழிய சிறை

0
118

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதிவாதிகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரரான எஸ்.எம். ரஞ்சித்  எஸ்.எம். சந்திரசேனவின் மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here