டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று பீகாரின் பாட்னா நகரை நோக்கிப் புறப்படவிருந்தது. இதன்போது திடீரென கார் ஒன்று விமானத்தின் அடிப்பகுதியில் வந்து நின்றது. விமானத்தின் முன்புற சக்கரத்துடன் அக்கார் மோதுவது நூழையில் தவிர்க்கப்பட்டது. விமானத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கோ பெர்ஸ்ட் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் ஒன்றே விமானத்தின் அடியில் வந்து நின்றது.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. விமானம் திட்டமிடப்பட்ட நேரத்தில் பாட்னா நோக்கி புறப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.