உணவுப் பற்றாக்குறையினால் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த சில நாட்களில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர்களில் நால்வர் கடுமையான போஷாக்கு குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும், இந்த குழந்தைகளுக்கான விசேட போஷாக்கு உணவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர் தெரிவித்தார்.
விடுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.