கொத்மலையில் பஸ் விபத்து ஒருவர் பலி 12 பேர் காயம்.

0
242

பூண்டுலோயாவிருந்து கம்பளை நோக்கி நோக்கி சென்ற பஸ் விபத்து.ஒருவர் பலி 12 பேர் படும் காயம்.

பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் அம்பத்தலாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 14 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here