டி.சந்ரு செ.திவாகரன்
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் வெண்டிகோனர் பகுதியில் இன்று(5) காலை மண் சரிவு ஏற்பட்டு , மரமும் சரிந்து விழுந்து இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது
இம் மண்சரிவு ,மரமும் முறிவு காரணமாக நுவரெலியா, ஹட்டன் , தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது
தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வெண்டிகோனர் பகுதியில் அடிக்கடி மணிசரிவு ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது
இதனை தொடர்ந்து நானுஓயா பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து தற்போது இவ்வீதியில் ஒரு மறங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெற்று வருகிறது