வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் சிறுத்தைபுலி – வீடியோ இணைப்பு

0
751

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா – வனராஜா சமர்வில், தோட்டப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் பாரிய சிறுத்தை புலி ஒன்று உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை புலி மரம் ஒன்றில் இருப்பதை கண்ட பொதுமக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவம் இடத்திற்கு வருகைதந்த ஹட்டன் பொலிஸார், சிறுத்தை புலியினை மீட்பதற்காக நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில்  விரிக்கப்பட்ட வலையில் இந்த சிறுத்தை புலி மாட்டிகொண்டு மரத்தில் எரியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சிறுத்தை புலியினை மீட்க நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here