இன்றைய பலன் உங்களுக்கு எப்படி? 08.08.2022

0
273

மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று மதியத்திற்கு மேல் நிறைவேறும்.
பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த உதவி வந்து சேரும்.
கார்த்திகை 1: தடைபட்ட வேலை முடியும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: மதியத்திற்கு மேல் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும்.
ரோகிணி: புதிய முயற்சிகள் இன்று கை கொடுக்காமல் போகும். உங்கள் திறமைக்கு சவாலான நாள்.
மிருகசீரிடம் 1, 2: பணியிடத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். பேச்சில் கவனம் தேவை.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவாதிரை: வியாபாரத்தில் சூட்சுமங்கள் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: வாழ்க்கைத் துணை வழியே ஆதாயம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.

கடகம்: புனர்பூசம் 4: பொருளாதார தடைகள் விலகும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். எதிர்பாராத வரவு உண்டு.
ஆயில்யம்: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்: மகம்: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.
பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சி செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு.
உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: தாய்வழி உறவினர்கள் வழியே ஆதாயம் அடைவீர்கள்.
அஸ்தம்: வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். சகஊழியர்கள் ஒத்துழைப்பர்.
சித்திரை 1, 2: திடீர் பயணம் உண்டாகி அலைச்சல் ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் முயற்சி நிறைவேறும்.

துலாம்: சித்திரை 3, 4: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையில் உயர்வு உண்டாகும்.
விசாகம் 1, 2, 3: விஐபிகள் உதவியுடன் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும்.

விருச்சிகம்: விசாகம் 4: உங்களை விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவர்.
அனுஷம்: தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்த்த வருவாய் உண்டு.
கேட்டை: தடைபட்ட முயற்சி முடிவிற்கு வரும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

தனுசு: மூலம்: உங்களது பிரச்னைகளை மற்றவர்களிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
பூராடம்: இன்று எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். அதுவே நல்லது.
உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: செலவுகள் அதிகரிக்கும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும்
திருவோணம்: வரவை விட செலவு கூடும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியை ஏற்படுத்துவர்.
அவிட்டம் 1, 2: உங்கள் செயல்களை போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: உங்களின் தனித்தன்மையின் வழியே பிறரது விருப்பத்திற்கு ஆளாவீர்கள்.
சதயம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவி செய்வர்.
பூரட்டாதி 1, 2, 3: பணியிடத்தில் உண்டான தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: உங்களுடைய நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். ஆதாயமான நாள்.
ரேவதி: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்நின்று நடத்துவீர்கள். பிறரால் மதிக்கப்படுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here