அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீரர் ஒருவர், தான் 10 லட்சம் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மைக்கல் ஜோன்ஸ் எனும் இந்த மல்யுத்த வீரர், 1985 ஆம் ஆண்டு போட்டிகளில் அறிமுகமானவர். உலக மல்யுத்த சம்மேளனத்தின் (WWF) போட்டிகளில் 8 வருடங்கள் பங்குபற்றியதன் மூலம் பெரும் புகழ் பெற்றார். மிஸ்டர் ஜோன்ஸ், லூசியஸ் பிரவுண் உட்பட பல்வேறு பெயர்களில் அவர் போட்டிகளில் பங்குபற்றினர். வேர்ஜில் எனும் பெயரில் அதிக பிரபலமானவர். தற்போது மைக்கல் ஜோன்ஸுக்கு 71 வயது.
இந்நிலையில், தான் இதுவரை சுமார் ஒரு மில்லியன் பெண்களுடன் பாலியல் உறவுகொண்டுள்ளதாக மைக்கல் ஜோன்ஸ் கூறினார்.
அண்மையில் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.