14 வருட கால இடைவெளிக்கு பின்னர்இணையும்  விஜய்– த்ரிஷா ஜோடி

0
302

14 வருட கால இடைவெளிக்கு பின்னர் விஜய்– த்ரிஷா ஜோடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய்-த்ரிஷா முதன்முதலாக இணைந்து நடித்த ‘கில்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து இந்த இருவரது ஜோடி இணைந்து ‘திருப்பாச்சி’, ‘ஆதி’ மற்றும் ‘குருவி’ போன்ற படங்களில் நடித்தனர்.  அதன்பின்னர் இவர்களை திரையில் ஒன்றாக இணைந்து பார்க்க முடியவில்லை. இருவரும் தனித்தனியாக வெவ்வேறு ஜோடிகளுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

14 வருட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி-67’ படத்தில் தான் விஜய்யுடன், த்ரிஷா ஜோடி சேரப்போவதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘தளபதி-67’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போவதாக சில செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது, ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here