கொழும்பில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் நடைபெற்ற 55ஆவது ஆசியான் தினத்தில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்து கொண்டார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வை இந்தோனேசியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் மற்றும் கொழும்பில் உள்ள 4 ஆசியான் உறுப்பு நாடுகளின் தூதுத் தலைவர்களான மலேசியாவின் உயர் ஸ்தானிகர் டான் யாங் தாய், மியன்மார் தூதுவர் ஹன் து, தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் மற்றும் வியட்நாம் தூதுவர் ஹோதி தான் ட்ரூக் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.