QR விநியோக முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு ; இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

0
452

QR குறியீட்டின் கீழ் எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

இதன்படிஇ கடந்த வார QR குறியீட்டின்படி வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அதே அளவு எரிபொருள் இந்த வாரத்துக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த வார தரவு பகுப்பாய்வின் பின்னர் எதிர்வரும் வாரத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி,

மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றர் பெற்ரோல், முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றர் பெற்ரோல் , வேன்களுக்கு 20 லீற்றர் பெற்ரோல், கார்களுக்கு 20 லீற்றர் பெற்ரோல், ஜெனரேட்டர்கள் மற்றும் உபகரணங்கள் 15 லீற்றர் பெற்ரோல், லொறிகளுக்கு 50 லீற்றர் பெற்ரோல், பஸ்களுக்கு 40 லீற்றர் டீசல் முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றர் டீசல், வேன்களுக்கு 20 லீற்றர் டீசல், கார்களுக்கு 20 லீற்றர் டீசல். ஜெனரேட்டர்கள் மற்றும் உபகரணங்கள் 15 லீற்றர் டீசல், லொறிகளுக்கு 50 லீற்றர் டீசல் என்றவாறு வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here