அட்டனில் லயன் குடியிருப்பில் தீ ; ஆறு வீடுகள் சேதம் – Update News

0
670

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எப்போட்ஸிலி தோட்ட கமுகுவத்தை ( மொண்டிபெயார்) பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ  விபத்தில் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் ஏனைய வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை வேளையில் குறித்த குடியிருப்புக்களில் உள்ளவர்கள் வேலைக்குச் சென்றிருந்தமையினால் உயிராபத்துக்கள் ஏதேனும் ஏற்படவில்லை.

எனினும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

24 இருபக்க குடியிருப்புக்களைக் கொண்ட லயன் குடியிருப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடுகளில் எற்பட்ட சேதத்தினால் பெரும் எண்ணிக்கையிலான பொருட்கள் சேதங்கள் ஏற்பட்டள்ளதாகவும் இதன்போது பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக. சிறுவர் நிலையத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எம்.கிருஸ்ணா

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here