ஒரு வார காலத்துக்குள் 1,590 டெங்கு நோயாளர் நாடளாவியரீதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நோயாளிகளுள் நூற்றுக்கு 50.8 வீதமானோர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் 56 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நோய் பரவலுக்கான அதிஎச்சரிக்கை மிகுந்த வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள் ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.