மேஷம்: அசுவினி: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு
பரணி: துணிச்சலுடன் செயல்பட்டு நெருக்கடிக்கு முடிவு கட்டுவீர்கள். எதிர்பார்த்த வரவு மகிழ்ச்சி தரும். கார்த்திகை 1: புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. வாழ்க்கை ரகசியங்களை பிறரிடம் தெரிவிக்க வேண்டாம்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: குடும்பத்தில் பிரச்னை தோன்றும். உணர்ச்சி வசப்படவேண்டாம். பேச்சில் கவனம் தேவை.
ரோகிணி: உங்கள் தன்மானத்தை சீண்டும் வகையில் சிலர் செயல்படலாம். அமைதி காப்பது நன்மையாகும்.
மிருகசீரிடம் 1, 2: வார்த்தைகளில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். நிதானம் தேவை.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பங்கள் வேண்டாம். திட்டமிட்டு செயல்படுவதில் வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை: உங்கள் செயலை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: விரும்பியதை அடைய முயற்சி செய்வீர்கள். எண்ணம் வெற்றி பெறும். குழப்பம் மறையும்.
கடகம்: புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சியில் கவனம் செல்லும். எதிர்பாராத செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
பூசம்: எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆடம்பர செலவால் பணம் கரையும். யோசித்து செயல்படவும்.
ஆயில்யம் அறிவாற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்: மகம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வசூலாகும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூரம்: நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய நட்புகளால் தேவைகளை அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் 1: விலகிச் சென்ற உறவினர் தேடி வருவார்கள். உங்கள் செயல், வாக்கிற்கு மரியாதை உண்டாகும்.
கன்னி: உத்திரம் 2, 3, 4: செல்வாக்கு உயரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.
அஸ்தம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பர்.
சித்திரை 1, 2: திறமை வெளிப்படும். அதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். எதிர்பார்த்த வருமானம் உண்டு.
துலாம்: சித்திரை 3, 4: எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காமல் போகும். முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும்.
சுவாதி: நண்பர்களுக்கு உதவி செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.
விசாகம் 1,2, 3: அறிமுகம் இல்லாதவர்களுடன் பழக்கம் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போடவும் வேண்டாம்.
விருச்சிகம்: விசாகம் 4: மனதை சங்கடப்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கும். அமைதி காப்பது நல்லது.
அனுஷம்: நெருக்கமானவரிடம் மோதல் உண்டாகும். பிறரது விவகாரத்தில் தலையிட்டு பிரச்னைக்கு ஆளாகலாம்.
கேட்டை: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.
தனுசு: மூலம்: நண்பர்களின் வழியே நன்மைகளைக் காண்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். நெருக்கடி விலகும்.
பூராடம்: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பப்படி செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1: எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள். நீண்ட நாட்களுக்குப்பின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்: உத்திராடம்2, 3,4: அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.
திருவோணம்: எதிரிகள் சரணடைவார்கள். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1இ 2: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
கும்பம்: அவிட்டம் 3, 4: பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
சதயம்: குடும்பத்தினரால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தேவையற்ற குழப்பம் உண்டாகும். நெருக்கடியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்தவற்றில் நன்மை காண முடியாமல் போகும். அதிகாரிகளால் சங்கடத்திற்கு ஆளாகலாம்.
மீனம்: பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படலாம். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பர்.
உத்திரட்டாதி: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உங்கள் செயலில் மற்றவர்கள் குறை சொல்வர்.
ரேவதி: வேலை நெருக்கடியால் டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் சாதகமான சூழ்நிலை இருக்காது.