ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாக கலந்துரையாடலின் பின்னர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாடாளுமன்றக் குழு ஊடாக அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு தனது எதிர்ப்பை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது