ரயில் முன் பாய்ந்து 50 வயது நபர் தற்கொலை

0
392

ரயில் முன் பாய்ந்து 50 வயது மதிக்கத் தக்க நபரொருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில், பதுளை, தெய்யனவெல பகுதியில்  பாய்ந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ள, பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here