க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி (08.28) அட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் இரண்டின் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து 44 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதில் பொறியியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 22ஆம் இடத்தையும் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 10ஆம் இடத்தையும் பாடசாலை பதிவு செய்துள்ளது.
பாடசாலையின் பொறியியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ராஜேந்திரன் நிதர்சன் 3A சித்திகளை பதிவு செய்து மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 22ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் மோகன் திவியலோசினி A- 2B சித்தியுடன் மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தையும், ஜோன்சன் சஜீவன் 2A- B சித்திகளுடன் மாவட்ட மட்டத்தில் 5ஆம் இடத்தையும், சுப்பிரமணி ஸ்ரீ ரஜிதா 1A-2B சித்திகளுடன் மாவட்ட மட்டத்தில் 8ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் இந்த பிரிவில் இருந்து 14 மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் முருகேசு லிசானி 3A சித்திகளை பதிவு செய்து மாவட்ட மட்டத்தில் 10ஆம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் கலைப்பிரிவில் இருந்து 11 மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உயிரியல் தொழினுட்ப பிரிவில் ஆனந்தகுமார் சுபாசினி 1A-2B சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 5ஆம் இடத்தையும், தமிழ்வாணன் தர்சிகா 2A-C சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 7ஆம் இடத்தையும், வாசுதேவம் மதுசிகா A-2B சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 10ஆம் இடத்தையும் பெற்றக் கொண்டுள்ளதுடன் இந்த பிரிவில் இருந்து 13 மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வர்த்தக பிரிவில் இருந்து மூவரும் நுண்கலை பிரிவில் இருந்து மூவரும் என மொத்தமாக 44 மாணவர்கள் பாடசாலையல் இருந்து நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலையின் பொறியியல் தொழினுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 48 மாணவர்களில் 44 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் இது 92% சித்தியாகும்.
உயிரியல் தொழினுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 39 மாணவர்களில் 38 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இது 97% சித்தியாகும்.
கலைப்பிரிவில் பரீட்சைக்க தோற்றிய 36 மாணவர்களில் 31 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இது 86% சித்தியாகும்.
வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 18 மாணவர்களில் இருந்து 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இது 72% சித்தியாகும்.
நுண்கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 21 மாணவர்களில் 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இது 71% சித்தியாகும்.
பாடசாலையில் இருந்து பரிட்சைக்கு தோற்றிய 162 மாணவர்களில் 141 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இது 87% சித்தியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.