கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அத்துரலிய ரத்தன தேரர் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போதைப் பொருள் பாவனையை தேசிய பிரச்சினையாக கவனத்தில் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார் கொழும்பு மாளிகாவத்தை,கொலன்னாவை மற்றும் வனாத்தமுல்ல பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டுமென்றும் சபையில் தெரிவித்தார்.
ஹெரோயின் போதைப்பொருள் பாவனையை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூக மட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைப் பொருள் பாவனை திடீரென அதிகரித்துள்ளமை பாரதூரமான நிலைமையாகும் என சுட்டிக்காட்டிய அவர் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.