அடுத்த வருடமும் பிரச்சினையை எதிர்க்கொள்ள நேரிடும்

0
288

இன்று நாட்டில் ஒரு பகுதியினர் உணவின்றி தவிக்கின்றனர். நடுத்தர மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். அவர்கள் யாரிடமும் பிச்சை எடுக்க விரும்புவதில்லை. அடுத்த வருடமும் இந்தப் பிரச்சினையை சந்திக்க நேரிடும். இலங்கையில் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை நேற்று (14) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்டது.

இன்று உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யுக்ரைன் போர் காரணமாக, எங்களுக்கு தேவையான கோதுமை கிடைக்கவில்லை. விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க முடியும் என்றும் இதன்மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here