பிரிட்டன் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு கொண்டு வருவதற்கு முன்னர், ஸ்கொட்லாந்திலுள்ள புனித கயில்ஸ் தேவாலயத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு இலங்கை வம்சாவளியான பெண் ஒருவருக்கு முதற் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
வனேஷா நந்தகுமாரன் என்ற பெண்ணுக்கே இச்சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 56 வயதான அவர் 1980-ஆம் ஆண்டு மேலதிக கல்விக்காக பிரிட்டனுக்கு சென்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவரின் உறவினரான வைத்திலிங்கம் துரைசாமி என்பவருக்கு 1937 ஆம் ஆண்டு 06ஆவது ஜோர்ஜ் மன்னரால் நைட் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வனேஷா நந்தகுமாரன் அவருக்கு கிடைத்த சந்தர்ப்பம் பற்றி தெரிவிக்கையில்,
இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கவில்லையென்றும் வெயில், மழையை பொருட்படுத்தாது மகாராணிக்கு இறுதி கௌரவத்தை செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.