தனியார் வகுப்பிற்குச் சென்ற 15 வயது சிறுமி மாயம்

0
529

தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து காணாமல் போன சிறுமியை தேடும் பணியினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here