நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்குவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திரிபோஷவை மீண்டும் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் திரிபோஷவை தயாரிக்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக
திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கான திரிபோஷ உணவில் அதிகளவான நச்சுத்தன்மை வாய்ந்த மூலம் பொருள் அடங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது விநியோகிக்கப்படும் மூன்று ஊட்டங்களில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த அஃபலரொக்சின் என்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.