75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரிய புத்தகக் கண்காட்சி BMICH  விஜயத்தின் போது ஜனாதிபதி தெரிவிப்பு

0
227

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்தார்.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர உள்ளிட்டோர் வரவேற்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here