சர்வதேச நாணய நிதியத்துடனான (ஐ.எம்.எப்) பணிக்குழாம் மட்ட ஒப்பந்தம் (Staff Level Agreement) இறுதி ஒப்பந்தம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.
ஐ.எம்.எப் உடனான பணிக்குழாம் மட்ட ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை எனவும், கலந்துரையாடல்கள் மற்றும் விபரங்கள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு செய்வதற்கு முன்னதாக அமைச்சரவை மற்றும் எதிர்க்கட்சிக்கு இது குறித்தான உடன்படிக்கை குறித்து விளக்கமளிக்கப்படுமென சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தின் விபரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அரசாங்கத்தை பலமுறை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது