பொகவந்தலாவை நகரப்பகுதியில் பாவனைக்கு உதவாத 100 கிலோ அத்தியாவசிய பொருட்கள் பொகவந்தலாவ நகர வர்த்தக நிலையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.
பொகவந்தலாவை நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு குறித்த பாடசாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு கௌப்பி, வெள்ளை கௌப்பி, அவல் போன்ற பாவனைக்கு உதவாத அத்தியாவசிய பொருட்கள் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்குமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த பொருட்களில் புலுக்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ் சதீஸ்