கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரை நாளை முதலாம் திகதி சனிக்கிழமை முதல் விசேட சொகுசு சுற்றுலா புகையிரதம் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் சேவையில் ஈடுபடும் சுற்றுலா ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 9.18 மணிக்கு கண்டியை சென்றடையும. இந்த ரயில் கண்டியில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.
முதல் வகுப்பு டிக்கெட் விலை ரூ.2000/- மற்றும் 2ம் வகுப்பு டிக்கெட் விலை 1500 ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை விசேட சொகுசு சுற்றுலா புகையிரதம் விரைவில் இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.