ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

0
228

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவாகவும் 07 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என தெரியவருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/51/L.1 Rev.1 எனும் தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தான், கியூபா, பொலிவியா, உஸ்பெகிஸ்தான், வெனிசூலா, செச்சினியா ஆகிய 7 நாடுகளுமே எதிர்த்து வாக்களித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here