கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட முற்பட்டதாக கூறி அட்டனில் ஐந்து பெண்கள் சந்தேகத்தில் கைது

0
1074

தீபாவளி  பண்டிகைக்காலங்களில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எனக்கூறி சந்தேகத்தின் பேரில் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவை அட்டன் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை அட்டனில் இருந்து பொகவந்தலாவைக்கு சென்ற பஸ்ஸொன்றில் சந்தேகத்திடமாக பெண்கள் மூவர் இருந்ததையடுத்து  அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த பெணகள்  உட்பட  ஐந்து பெண்களை சந்தேகத்தின் பேரில் அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்கள் ஐவரும் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் சன நாமாட்டம் அதிகரித்துள்ள இடங்களில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிப்பதாக  அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  நேர்த்தியாக ஆடை அணிந்துள்ள குறித்த பெண்கள் தம்மை எவரேனும் சந்தேகம் கொள்ளாதவாறு நடந்துக்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்களின் பைகளை சோதனையிட்ட போது அதில் பல ஏ.டி.எம் அட்டைகள், அடையாள அட்டைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி, கைது செய்யயப்பட்டுள்ள பெண்களை அட்டன் நீதிமன்றிற்ல ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக்காலங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையாகிவிட்ட நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு நகைகள் பணப்பைகள் என்பதை தாமே பாதுகாத்துக்கொள்வது அவசியம் எனவும் அட்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக அட்டன் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சிவில் உடைகளில் பலர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த பண்டிகைக்காலங்களில் இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 14 பேரை அட்டன் பொலிஸார் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  எம்.கிருஸ்ணா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here