மேஷம்: அசுவினி: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்
கார்த்திகை 1: உறவினருடன் ஏற்பட்ட சங்கடம் தீரும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்காலத் திட்டம் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் ஆதரிப்பர்.
ரோகிணி: உறவினர் ஆதரவுடன் விருப்பம் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: புதிய முயற்சியில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். சொத்து பிரச்னை தீரும்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
திருவாதிரை: நண்பர்கள் வழியே ஆதாயம் உண்டாகும். எண்ணம் ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தில் பிரச்னைகளை சரிசெய்வீர்கள். உறவினரால் நன்மை உண்டு.
கடகம்: புனர்பூசம் 4: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உறவினரால் உதவி உண்டாகும்.
பூசம்: குடும்பத்தினர் ஆதரவுடன் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள்.
சிம்மம்: மகம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும்.
பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும்.
உத்திரம் 1: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதியபாதை தெரியும் நாள்.
கன்னி: உத்திரம் 2, 3, 4: சிந்திக்காமல் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். நெருக்கடியான நாள்.
அஸ்தம்: மற்றவரை நம்பி உங்கள் செயல்களை ஒப்படைக்க வேண்டாம். நெருக்கடி வரலாம்.
சித்திரை 1, 2: மற்றவரை அனுசரித்துச் செல்வதன் மூலம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
துலாம்: சித்திரை 3, 4: திட்டமிட்ட செயல்கள் இன்று இழுபறியாகும். பயணத்தில் கவனம் தேவை.
சுவாதி: மற்றவரிடம் விவாதம் வேண்டாம். அதனால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
விசாகம் 1, 2, 3: நண்பர்களால் பிரச்னைகள் உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை.
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆதாயம் அதிகரிக்கும்.
அனுஷம்: எளிதாக நிறைவேறும் என்று எதிர்பார்த்த முயற்சி ஒன்று இழுபறியாகும்.
கேட்டை: பிரச்னைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வருமானம் கூடும்.
தனுசு: மூலம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
பூராடம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். செல்வாக்கு கூடும்.
உத்திராடம் 1: நண்பர்கள் பாராட்டுவர். முடிக்க முடியாத ஒரு வேலையை இன்று முடிப்பீர்கள்.
மகரம்: உத்திராடம் 2, 3, 4: தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
திருவோணம்: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் ஏற்படும்.
அவிட்டம் 1, 2: உங்கள் அணுகுமுறையால் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வருமானம் உயரும்.
கும்பம்: அவிட்டம் 3, 4: வார்த்தை, செயலில் நிதானம் தேவை. மற்றவரால் மனநிலை பாதிக்கும்.
சதயம்: சந்திராஷ்டமம் என்பதால் சங்கடம் தொடரும். சிறிய வார்த்தை கூட பிரச்னைக்கு காரணமாகலாம்.
பூரட்டாதி 1, 2, 3: வீண் விவாதம் வேண்டாம் உங்கள் செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படலாம்.
மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். நன்மையான நாள்.
உத்திரட்டாதி: செயலில் விவேகம் இருக்கும். கடின வேலையைக் கூட எளிதில் முடிப்பீர்கள்.
ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும் நாள். உறவினர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்